Breaking News

" ஜூலியட்"களுக்கு வலை வீசும் வேலையில்லாத தெருவோரா "ரோமியோ"க்கள்! கலக்கத்தில் பெற்றோர்!

வேலூர், மார்ச் 19-
வேலூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பள்ளி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்துவதற்காக சில ரோமியோக்கள் சுற்றுவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் வேலையில்லாத வாலிபர்கள், பள்ளிக்கு செல்லும் 13 முதல் 17 வரையிலான மாணவிகளை மோட்டார் பைக்குகளில் சென்று பின்தொடர்வார்கள்.

பின்னர், தங்களை திரும்பிபார்க்கும் மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள்
கூறுவது, விதவிதமான பரிசுப்பொருட்களை வாங்கிகொடுத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்துகின்றனர்.

மாணவிகளும் அந்த பரிசுப்பொருட்களுக்கு மயங்கி, நாளடைவில் அந்த வாலிபர்களுடன் சேர்ந்து, வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி வனப்பகுதி, ஏலகிரி மலை, மற்றும் பாலாறு உள்ளிட்ட ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்கின்றனர்.

அங்கு, மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் ஒருசில ரோமியோக்கள், சில்மிஷங்களை மாணவிகளுக்குத் தெரியாமலே தங்களது செல்போனில் படம்பிடித்து விடுகின்றனர்.

பின்னர், செல்போனில் பதிவான படங்களை வைத்து அம்மாணவிகளை பயமுறுத்தி, நாள்தோறும் தாங்கள் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து, மாணவிகளிடம் பல்வேறு பாலியல் அத்துமீறல்களை செய்து வருகின்றனர்.
வேலூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் போலிசாரின் ரோந்து பணி முக்கிய சாலைகளில் மட்டுமே உள்ளது.

இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் தங்களிடம் சிக்கும் பள்ளி மாணவிகளை அந்நபர்கள், பாலியல் அத்துமீறல்கள் செய்வது பெற்றோர்களை கண்கலங்க வைத்துள்ளது.

No comments

Thank you for your comments