Breaking News

தலித் மக்களின் விசுவாசத்தில் ஓர் உண்மை உழைப்பாளி

திருப்பத்தூர், மார்ச் 15-
நாடு என்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு, நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு என தன் நலம் பெரிது என்று பாராமல் பிறர் நலம் அதுவும் தலித் மக்களின் நலம் பெரிது என தன் வாழ்நாளை முழுவதுமாக சமுதாய மக்களுக்காகவே தன்னை இணைத்துக் கொண்டும் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் எரும்பு போலவும், இவரின் வளர்ச்சி கண்டு எத்தனையோ அரசியல் கட்சிகள் இவருக்கு அழைப்புவிடுத்தும் தான் ஒரு தனி மனிதன் என்றும் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி தனிதான் என்று சொல்லும் அளவுக்கு தனி ஒருவனாக தன்னை ஈடுபடுத்தி வரும் இளைஞர் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி எனும் குக்கிராமத்தில் வசிக்கும் தலித் சமுதாயமக்களுக்கு போராடி
வரும் ஏலகிரி கோபிநாதன் தன் இளம் வயதில் தன் தலைவர் ஒருவர் என்றால் அறிவுகதிரவன் அரசியல் சட்ட சிற்பி டாக்டர்.அம்பேத்கர் ஒருவரே என தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு மக்கள் தொண்டு ஆற்றி வருகிறார். மேலும் கிராம கல்வி மேம்பாட்டு தொண்டு நிறுவனம் எனும் அமைப்பை ஏற்படுத்தி எங்கெல்லாம் தலித் சமுதாயம் தாக்கபடுகிறதோ அங்கெல்லாம் தன் உதவி கரங்களை நீட்டுவதில் தவரவில்லை.  அதேபோல் தலித் மாணவ மாணவியர்களுக்கு  இவரின் தொண்டு நிறுவனத்தின் மூலமாக இலவச நோட்டு புத்தகம் வழங்குவது, இலவச சீருடை வழங்குவது, கல்வியில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு உதவுவது போன்ற செயல் திறனை பார்த்த தமிழக அரசு இவரை அழைத்து சேவை மனபான்மையை பாராட்டி இவருக்கு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாவட்ட நலக்குழு உறுப்பினர் பதவி வழங்கி கௌரவித்துள்ளது. இவரின் சேவை பனப்பான்மையை கூர்ந்து கவனித்த தலித் சாகித்ய அகடமி இவருக்கு 2007-ம் ஆண்டு சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனம் என்று பாலா சாஹேப் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் திருகரங்களால் அம்பேத்கர் அருந்தொண்டா; விருதும், இந்திய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையா; 2013-ம் ஆண்டு புனியா அவா;களால் அம்பேத்கர் தேசிய விருது மற்றும் தலித் சாகித்ய அகடமி தலைவராக டாக்டர்.எஸ்.பி.சுமநாஸ்கரால் அவர்களின் திருக்கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2006 சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் முலாயம் சிங் யாதவ் கட்சியான சமாஜ் வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் இவருடைய சமூக பணி தொடர்ந்து செயலாற்றி கொண்டு வந்தார். ஏப்ரல் 14-ம் தேதி வந்துவிட்டால் இவருக்கு விழா கொண்டாட்டம் தான் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் தமிழ்நாடு மாவட்டம் முழுவதும் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிப்பது மற்றும் கேக் வெட்டி விழா கொண்டாடுவது  என்று தொடர்ந்து வண்ணம் உள்ளார். இவரின் செயல்பாட்டை கவனித்த இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே, எம்.பி, இவருக்கு அழைப்பு விடுத்து இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ளார். தொடரட்டும் இவருடைய சமூக பணி.

No comments

Thank you for your comments