Breaking News

இடிந்துவிழும் நிலையில் ரேஷன் கடை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?


திருப்பத்தூர் மார்ச் 15-
விழும் நிலையில் உள்ள நியாயவிலை கட்டிடம் விரிசல் விட்ட நிலையில் நான் எப்போதும் கீழேவிழுவேன் நான் விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டால் நான் பொறுப்பள்ள என்று பல்லை காட்டி கொண்டு இருக்கிறது. வேலூர் மாவட்டம், போ;னாம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்ட நகரமைய பகுதியில் பாண்டியன் வீதி (இதயம் இன்ஸ்ட்டியூட்) எதிரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சி.2526-க்கு உட்பட்ட நியாயவிலை கடை எண்.4-ல் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு பயனாளிகளாக 903 குடும்ப அட்டைதார்கள்
உள்ளனர். இங்கு வயதான தாய்மார்கள், கா;பிணிபெண்கள் என தினசாரி வந்த வண்ணம் உள்ளனர். இக்கட்டிடம் மிக பழமை வாய்ந்தது. ஆகையால் ஆங்காங்கே சுவர்கள் பாலபாலமாக தன் வாயை பிழந்துக் கொண்டு பள்ளை காட்டி இளித்துக் கொண்டிருக்கிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள தான் அணிந்திருக்கும்
(சிமெண்ட்) முழுமையாக உரித்துவிட்டு முழு நிர்வாணத்தை கம்பியின் கபாலமாக காட்சி அளிக்கிறது. இக்கடையில் விற்பனையாளராக இருக்கும் கோகிலா பயத்தில்தான் பணி செய்து வருகிறார். அட்டைதாரர்கள் வரும் போது அமர்ந்து பதிவேட்டில் பதிந்துவிட்டு பிறகு உடனே எந்த நேரத்திலும் எழும் நிலையில் கட்டிடத்திற்கு பயந்து வெளியில் வந்து உயிர் பாதுகாப்பில் நிற்பதாக தொரிகிறது. இக்கட்டிடம் பற்றி பலமுறை கூட்டுறவு சங்க செயலாளர் குணசேகரன், மற்றும் தேவேந்திரனிடம் எடுத்து சொல்லியும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதுவொருபுறம் இருக்க நியாயவிலை கடை அடைத்துவிட்ட பிறகு வராந்தா பகுதியில் இரவு நேரத்தில் மதுபிரியர்களின் மது அருந்தும் பாராகவும், சமூக விரோதிகளின் அஜால் குஜால் வேலை நடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். ஆகவே இங்கு உயிர் சேதம் ஏற்படும்முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினால் நிச்சயம் பல உயிர்கள் இழக்க நோரிடும், அதன் பிறகு எல்லாம் முடிந்த பின் கட்டிட விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அவரவர் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கும். ஆனால் அந்த நிதி இறந்தவர்களின் உறவினர் இடத்தில் அன்பு காட்டுமா, அரவணைக்குமா, சற்று சிந்தித்து பார்த்தால் மிகப்பொரிய விபத்தை தவிர்க்கலாம். விபத்து நடப்பதும், உயிர் சேதம் ஏற்படாமல் இருப்பதும், மாவட்ட நிர்வாகத்தில் கையில் தான் உள்ளது.

No comments

Thank you for your comments