திருவண்ணாமலை அருகே அனாதையாக கிடந்த மூட்டைகளில் ஐம்பொன் சிலைகள் கடத்தியவர்கள் யார்? போலீசார் விசாரணை
தி.மலை, மார்ச் 14-
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே காட்டுப் பகுதியில் அனாதையாக இருந்த இரண்டு பைகளில் ஐம்பொன் சிலைகள் இருந்தது. இதனை கடத்தி வந்து இப்பகுதியில் போட்டவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவில் தானிப்பாடி வனவர் சங்கர் தலைமையில் வனக்காப்பாளர்கள் தீனதயாளன், ராஜமாணிக்கம், பாலகிருஷ்ணன் மற்றும் வனக்காவலர் மகாலிங்கம் ஆகியோர் கொண்ட வனத்துறையினர் கல்வராயன் தொடர்ச்சி மலையில் உள்ள சவாமி மலை பீட்டில் ரோந்து பணி மேற்கொண்ட போது நாவக்கொல்லை சரக காட்டுப்பகுதியில் அனாதையாக கோணிப்பை ஒன்றும்
உரப்பை ஒன்றும் இருந்து தெரியவந்தது. தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருள் வழங்கவும் அல்லது வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்ய பணத்தை யாராவது ரகசியமாக எடுத்துச் செல்ல முயன்றிருக்கலாம் அல்லது வெடி குண்டாக கூட இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வனத்துறையினர் அதனை கைப்பற்றி பதற்றத்துடன் பிரித்துப்பார்த்ததில் பைகளில் அழகிய வேபை?பாடுகள் கொண்ட ஐம்பொன் தெய்வ சிலைகள் ஆறு இருப்பது கண்டு ஆச்சர்ய முற்றனர். உடன் வனத்துறையினர் தங்களின் மேலதிகாரிகளுக்கு தகவல் தந்துவிட்டு தானிப்பாடி போலீஸில் ஒப்படைத்தனர். அமர்ந்த நிலையில் உள்ள காளி சிலை, நின்ற நிலையில் உள்ள காளி சிலை, பெருமாள், சூரியபகவான்,தெய்வானை மற்றும் சீதாதேவி,பூதேவி சமேத ராமர் சிலைகள் என ஒரு அடி முதல் மூன்றடி வரை உள்ள சிலைகளை போலீஸார் தங்கள பாதுகாப்பில் வைத்துள்ளனர். சிலைகள் இருந்த பைகள் விழுப்புரம் மாவட்டம்கல்வராயன மலைப்பகுதியில் கிடைத்ததால் தானிப்பாடி போலீஸார் விழுப்புரம் மாவட்டம் போலீஸாருக்கு தகவல் தர் அவர்களும் கோயில் சிலகைள் காணவில்லை என கரியாலூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது என்றும் அச்சிலைகள் பெருக்கஞ்சேரி கிராம கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த சிலை கடத்தல்கார்களை போலீஸார் தீவிரமாகதேடிவருகின்றனர்.
No comments
Thank you for your comments