துருக்கி அங்காரா கார் குண்டுவெடிப்பு- பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு; 125க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அங்காரா, மார்ச் 14-
துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு
தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 7 பேர் மருத்துவமனையில்
உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிளிலே சதுக்கம் பகுதியில் இந்த தாக்குதல்
நடைபெற்றுள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய காரினை வெடிக்க
செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை அடுத்த பூங்கா அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பேருந்து உட்பட பல்வேறு வாகனங்கள் சிக்கிக் கொண்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக
உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகின்றது.
தாக்குதல் நடைபெற்ற பகுதியானது அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்
குடியிருப்புகள் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை
தொடர்ந்து பிரதமர் அஹ்மெத் தாவுதோக்ளு அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கு
அழைப்பு விடுத்தார். கடந்த 5 மாதத்தில் நடைபெற்ற 3 ஆவது பெரிய தாக்குதல்
இதுவாகும்.
No comments
Thank you for your comments