நாட்டில் உள்ள போலி நிதி நிறுவனங்களிடம் அப்பாவி மக்கள் ஏமாறுவது தவிர்க்கப்பட வேண்டும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் வி.எழிலரசு அறிவுரை
தி.மலை, மார்ச் 11-
மாவட்டத்தில் அதிக வட்டி, பரிசுப் பொருள்களைத் தருவதாகக் கூறும் நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் வி.எழிலரசு அறிவுரை வழங்கிப் பேசினார்.
மாவட்டத்தில் அதிக வட்டி, பரிசுப் பொருள்களைத் தருவதாகக் கூறும் நிதி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் வி.எழிலரசு அறிவுரை வழங்கிப் பேசினார்.
திருவண்ணாமலை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை
கல்லூரிப் பொருளாளர் எஸ்.பாபு முன்னிலை வகித்தார். முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார். விழுப்புரம் உள்கோட்ட வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் வி.எழிலரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியது:
போலி நிதி நிறுவனங்களிடம் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்
என்பதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல் துறை சார்பில்
நடத்தி வருகிறோம். நாட்டில் உள்ள போலி நிதி நிறுவனங்களிடம் அப்பாவி
மக்கள் ஏமாறுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு, கல்லூரி மாணவ - மாணவிகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 12.5 சதவீதம் மட்டுமே வட்டி தர முடியும். இதற்கு மேல் வட்டி தரவதாகக் கூறும் நிதி நிறுவனங்கள் போலி நிதி நிறுவனங்களாக மட்டுமே இருக்க முடியும். இதேபோல, ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிதி நிறுவனமும் பொதுமக்களிடம் இருந்து சேமிப்புத் தொகை பெறுவதற்காக பரிசுப் பொருள்களையோ, ஊக்கத்தொகையோ வழங்காது. பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் எது என்பதை இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து, கடலூர் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் கே.ஆர்.ரெஜினா மேரி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர் டி.ஜோஸ்பின் ஆலிஸ் மேரி, திருவண்ணாமலை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் பி.மனோன்மணி ஆகியோர் மாணவ -மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினர்.
தொடர்ந்து, போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி என்பதை விளக்கும் குறும்படங்கள் மாணவ - மாணவிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ -
மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்
No comments
Thank you for your comments