Breaking News

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் கடந்தாண்டு சாலை விதி மீறல் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராதமாக 5,33,850 ரூபாய் வசூலிக்கப்பட்டது

தி.மலை, மார்ச் 11-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் கடந்தாண்டு சாலை விதி மீறல் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராதமாக 5,33,850 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் காவல் துறையினர் கடந்தாண்டு நடத்திய வாகன சோதையின்போது, மது அருந்திவிட்டு வாகனம்
ஓட்டுதல், சீரூடை இல்லாமல் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், ஓட்டுநர் உரிமம், காப்பீடு, பதிவுச் சான்று இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமீறல்களின்கீழ் 6,144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், 4,303 வழக்குகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அபராதமாக 5,33,850 ரூபாய்
வசூலிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments