திருவண்ணாமலை அருகே கணவனால் மனைவி தூக்கிட்டி தற்கொலை
திருவண்ணாமலை, மார்ச் 7-
திருவண்ணாமலை அருகே உள்ள ராயம்பேட்டை வெள்ளைக் குட்டையில் வசிப்பவர் செல்வகுமார் (28), இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (23), இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் கவிதா என்ற குழந்தை உள்ளது.
செல்வகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்துவிட்டு
மனைவி செந்தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில்மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் கயிற்றில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென செல்வகுமார் மீது செந்தமிழ்ச்செல்வியின் தந்தை மனோகர் கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். திருவணணாமலை டிஎஸ்பி சரவணகுமார், கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர்
சம்பவ இடத்திற்கு சென்று செந்தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பிவைத்தனர்.
செந்தமிழ்ச்செல்விக்கு திருமணமாகி 2வருடங்களே ஆவதால் திருவண்ணாமலை ஆர்டிஒ விசாரணைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.
No comments
Thank you for your comments