ஊழலின் பிறப்பிடம் திமுக : அமைச்சர் வீரமணி காட்டம்
திருப்பத்தூர் மார்ச் 15-
தமிழக முதல்வாரின் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
சேலம் கூட்டுரோடு முத்துமாரியம்மன் கோயில் அருகில் மதினா மசூதி எதிரில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருப்பத்தூர் எம்எல்ஏ ரமேஷ் தலைமையிலும், நகர கழக செயலாளர் டி.டி.குமார் வரவேற்கவும், தொகுதி கழக செயலாளர் சுப்பிரமணியம், ஒன்றிய கழக செயலாளர் செல்வம், ஒன்றிய குழு தலைவர் டாக்டர். திருப்பதி, கந்திலி ஒன்றியக் குழு தலைவர் முருகன், நகர பாசறை செயலாளர் டி.டி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி கலந்துக்
கொண்டு பேசுகையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டோம். மேலும் விதவை தாய்மார்களுக்கு கறவை பசுமாடு, 2,10,000 ரூபாய் மதிப்பில் பசுமைவீடு, இலவச அரிசி, திருமண உதவித்தொகை மற்றும் பட்டம் படித்த பெண்களுக்கு 50,000 மற்றும் தாலிக்கு தங்கம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப், கர்பிணி பெண்களுக்கு டாக்டர். முத்துலட்சுமி காப்பீட்டு திட்டத்தின்மூலம் ரூ.12,000 என அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றி விட்டோம். கடந்த திமுக ஆட்சியில் இலவசமாக 2 ஏக்கர் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள், அதை நிறைவேற்றினார்களா? எங்கள் ஆட்சியில் ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மீதும், தலைமை கட்டுப்பாட்டை மீறும் கழக தொண்டர்கள் மீதும் உடனடி அடிப்படை உறுப்பினர்கள் பொருப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு சமீபத்தில் கால்நடை துறை அமைச்சர் சின்னையா, அமைச்சர் ரமணா நீக்கம். ஆனால் திமுகவில் ஊழல் செய்யாத அமைச்சர்களா? கடந்த ஆட்சியில் அமைச்சர் ராஜா 2-ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் இமாலய சாதனை படைத்து டெல்லி திகார் சிறையில் உள்ளார். ஊழலின் பிறப்பிடம் திமுக என்று அமைச்சர் வீரமணி திமுகவினருக்கு காட்டமாக பதில் கூறியிருக்கிறார். நாங்கள் செய்த சாதனைகளை தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் எடுத்துச் சொல்லி அதிமுக அமோக வெற்றிப் பெற்று புரட்சி தலைவி அம்மா மீண்டும் முதல்வராக பதவியேற்க செய்வோம் இது உறுதி என்று கூறினார். மேலும் இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சாமிகண்ணு, மாவட்ட சிறுபான்மை செயலாளர் வழக்கறிஞர் ஜிலானி, மாவட்ட எம்.ஜி.ஆர்.இ.அ.து.செ.தம்பாகிருஷ்ணன், நகர துணை செயலாளர் வீடியோ சரவணன், மடவாளம் ரகு மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி ரவி நன்றி கூறினார்.

No comments
Thank you for your comments