போலிஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் சங்கரை கவுசல்யா இழந்திருக்க மாட்டார்: எழுத்தாளர் மார்க்ஸ்
காவல்துறை
உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சங்கரை கவுசல்யா பறிகொடுத்திருக்க
வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என எழுத்தாளர் மார்க்ஸ்
தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் மார்க்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில்,
எனக்கு இதுவரை கிடைத்த தகவல்களின்படி சங்கர் கவுசல்யா திருமணம் ஆன உடனேயே போலிஸ் வரை பிரச்சினை போய் இருக்கிறது. காவல்
நிலையத்தில் கவுசல்யாவின் தந்தையிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.
அதற்குப் பின் பாட்டிக்கு உடல் நலமில்லை எனச் சொல்லி கவுசல்யாவை அழைத்து
வந்து ஏதோ சாமியாரிடம் மந்திரித்து சடங்குகள் எல்லாம் செய்யும்பொது
கௌசல்யா தப்பிக் கணவரிடம் மீண்டுள்ளார்.
அதற்குப் பின் ஒரு முறை கணவன் மனைவி இருவரும் கடைத் தெருவில் சென்று
கொண்டிருக்கும்போது ஒரு கும்பல் கடத்த முயற்சிக்க, அருகிலுள்ள மக்கள்
காப்பாற்றி காவல் நிலையத்திக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதற்குப் பின்னும் கௌசல்யாவின் தந்தை மிரட்டியுள்ளார். இவ்வளவு நடந்த
போதெல்லாம் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சங்கரை
கவுசல்யா பறிகொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எல்லாம் முடிந்தபின் இன்று கொலை செய்ய ஏவப்பட்ட நான்கு பேரை உள்
ஆடையுடன் நிற்க வைத்துப் படம் எடுத்து விளம்பரப்படுத்தித் தன் புத்தியைக்
காட்டுகிறது காவல்துறை.
அந்த நால்வரும் குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படட்டும். இப்படியான சாதி வெறிக்குக் காரணமான அரசியல், பண்பாட்டு நடவடிக்கைளும்,
அதை முன்னெடுப்பவர்களும்தான், அமைப்புகளும்தான் முதன்மைக் குற்றவாளிகள்
என்கிற புரிதலோடு செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments