பவுர்ணமி கிரிவலம் வர உகந்த கால நேரம்
திருவண்ணாமலை, மார்ச் 21-
நினைத்தாலே முக்திதரும் அண்ணாமலையார் ஆலயம் ஆன்மீகத்தில் அமைதி தலமும், அண்ணாமலையார் ஆலயம் சீரும் சிறப்பும் பெற்று பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். தினசரி மற்றும் பிரதோஷம் தமிழ்மாதப்பிறப்பன்றும் சனி பிரதோஷம் அமாவாசை இப்படிப்பட்ட காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் மாதந்தோறும் வரப்படும் பவுர்ணமி தினத்தன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் அணணாமலையார் மலையினை கிரிவலம் வலம் வருகிறார்கள்.
பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு முன்பு அண்ணாமலையார் ஆலயத்திற்கு
வந்திருந்து நீண்ட கியூ வரிசையில் நின்றிருந்து சுவாமி அண்ணாமலையாரையும் அம்பாள் உண்ணாமலையம்மனையும் சிறப்பு தரிசனம் செய்தபின்னர் அண்ணாமலையார் மலையினை கிரிவலம் வருகின்றார்கள். இப்படி கிரிவலம் வருவதால் பக்தர்களின் பல்வேறு பிரச்சனைகள் (குறைகள்) நீங்கி நிறைவு பெறுவதாக பக்தர்கள் கூறுகின்றார்கள். இதன்படி இம்மாதம் கிரிவலம் மன்மத ஆண்டு பங்குனி மாத பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரமுள்ள அண்ணாமலையார் மலையினை கிரிவலம் வர உகந்தநேரம் 22ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4.13 மணிக்கு பவுர்ணமி துவங்கி மறுநாள் 23ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.55 மணிவரையில் பவுர்ணமி ஆகும். இந்த கால நேரத்தில் அண்ணாமலையார் மலையினை கிரிவலம் வலம் வரஉகந்தகால நேரமாகும்.
No comments
Thank you for your comments