Breaking News

திருவண்ணாமலை அருகே ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ஏடிஎம் பணம் ரூ. 39 லட்சம் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படையினர்

திருவண்ணாமலை, மார்ச் 21
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ஏடிஎம் பணம் ரூ. 39 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். செய்யாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான சப்கலெக்டர் பிரபுசங்கர் மேற்பார்வையில் தாசில்தார் ரெஹானா
மற்றும் 5 பறக்கும் படை நிலைக்குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை தலைமையிலான நிலைக்குழு செய்யாறு -
காஞ்சிபுரம் கூட்டு சாலையில் மாங்கல் கூட்ரோடு அழிஞ்சல்பட்டு அருகே வந்துகொண்டிருந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வேனை மடக்கி சோதனையிட்டனர். உரிய ஆவணமின்றி ரூ. 39 லட்சம் கொண்டுவந்ததுதெரியவந்தது. சப்கலெக்டர் முன்னிலையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு பகுதி ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் ஏடிஎம் மெஷின்களில் நிரப்பப்பட கொண்டு வந்ததாக கூறப்பட்டபோதிலும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்யாறு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு
சங்கர் தெரிவித்தார். நேர்முக அதிகாரி பாஸ்கர் உடனிருந்தார்.

No comments

Thank you for your comments