இடஒதுக்கீடு உரிமையை அம்பேத்கரால் கூட பறிக்க முடியாது: பிரதமர் மோடி
பாஜக தலித் விரோத கட்சி அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அம்பேத்கர் நினைவேந்தல் கருத்தரங்கம் டெல்லி விக்யான் பவனில் நடந்துள்ளது. அதில் அம்பேத்கரின் தேசிய நினைவு மண்டபத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டி வைத்துள்ளார்.
பின்னர் அந்த கருத்தரங்கில் பேசிய அவர், தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில்
எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பாஜக தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதாக அவதூறு பரப்பப்படுகிறது. மேலும், பாஜக ஆட்சி அமையும்போதெல்லாம் இத்தகைய அவதூறு பரப்பப்படுகிறது.
வாஜ்பாய் பிரதமரமாக இருந்தபோதும், இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யப்போவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், பாஜக ஒருபோதும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நினைத்ததில்லை. இடஒதுக்கீடு என்பது தலித்துகளின் உரிமை. அதை யாராலும் பறிக்க முடியாது. ஏன், அம்பேத்கரால் கூட அந்த உரிமையை பறிக்க முடியாது.
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக மட்டுமே அம்பேத்கரை சித்தரித்தது மிகப்பெரிய தவறு அவர் உலக மக்களின் தலைவர். மக்களவைத் தேர்தல் தோல்வியில் இருந்து இன்னமும் மீளாத சிலருக்கு எங்களைப் பார்த்தாலே பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தில் ஏதாவது அர்த்தமில்லாமல் கருத்துகளை சிதறுகின்றனர்.
60 ஆண்டுகளாக இந்தத் தேசத்தில் ஆட்சி செலுத்திய அவர்களால் அம்பேத்கருக்கு ஒரு நினைவிடம் அமைக்க முடியவில்லை. அதனால், அம்பேத்கருக்கு நினைவிடம் அமைக்கும் நல் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments