திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக திருநங்கைக்கு சத்துணவு மைய அமைப்பாளராக பணி
திருவண்ணாமலை, மார்ச் 4- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபிராகஷ் (எ) ஜெயா என்பவருக்கு ஏர்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சத்துணவு மையத்தில்
அ.ஞானசேகரன் அவர்கள் வழங்கினார்.
இது குறித்து திருநங்கை ஜெயா கூறியதாவது ‘என் பெயர் ஜெயா (வயது 23) நான் கொளத்தூர் கிராமத்தில் ஜனனி, அம்மு, ஈஸ்வரி ஆகிய திருநங்கைகளுடன் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சிறுநாத்தூர் கிராமம் ஆகும். அப்பா, அம்மா,அண்ணன், அக்கா ஆகியோருடன் வசித்து வந்தேன். நான் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மேலும், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் டீயு (வரலாறு) இரண்டாம் ஆண்டு மூன்றாவது செமஸ்டர் படித்து வந்தேன். நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதை எனது குடுபத்தினர் கண்டித்தனர், இப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்று என்னை புறக்கணிக்கஆரம்பித்தனர். இதனால் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மனஉளைச்சல் ஏற்பட்டு யாருக்கும் சொல்லாமல் பெங்களுர் சென்றுவிட்டேன். அங்கு
ஒரு வருடம் இருந்த மற்ற திருநங்கைகளுடன் பிழைப்பு நடத்தி வந்தேன்.
தற்போது கடந்த 4 ஆண்டுகளாக கொளத்தூர் கிராமத்தில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறேன்.
நான் எங்கு சென்று வேலை கேட்டாலும் யாரும் திருநங்கைகளுக்கு வேலை வழங்க முன்வரவில்லை, பெட்ரோல் பங்கிலும் வேலை தருவதற்கு தயக்கம் காட்டினார்கள். இதனால் வேறு வழியில்லாமல் கடை கடையாக சென்று பணம் வசூலித்து எங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணி நிரப்பப்படுவதாக என்னுடைய தோழி மூலம் தெரியவந்து அதற்குவிண்ணப் பித்திருந்தேன். தற்போது, எனக்கு ஏர்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சத்துணவு மையத்தில் அமைப்பாளராக பணி நியமன ஆணை
வழங்கப்பட்டுள்ளது. என்னுடன் இருக்கும் திருநங்கைகள் என்னை ஆசீர்வதித்து, எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது, நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வாழ்த்தினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா திருநங்கைகளுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் காவல்துறையில் திருநங்கை ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது எனக்கும் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
No comments
Thank you for your comments