Breaking News

பால்னாங்குப்பம் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா

திருப்பத்தூர், மார்ச் 21-
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியானது மிக பழமை வாய்ந்தது. இப்பள்ளி திருப்பத்தூர் ஒன்றியம், பால்னாங்குப்பம் கிராமத்தில் உள்ளது. இதுநாள் வரை பல ஆண்டுகள் ஆகியும் இப்பள்ளியில் ஆண்டுவிழா நடக்கவில்லை. அதற்கான முயற்சியும் இதுநாள் வரை தலைமை ஆசிரியராக இருந்த எவறும் இதற்கு முயற்சிக்கவில்லை. ஆனால் தற்போது
தலைமையாசியராக இருக்கும் சண்முகம் சீரிய முயற்சியால் பள்ளியின் ஆண்டுவிழா மிக கோலாகலமாக கொண்டாடபட்டது.

ஆண்டுவிழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையிலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மார்க்கரெட், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜார்ஜ் மேற்பார்வையாளா; தருமன் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவும், பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் அனைவரையும் வரவேற்கவும், பள்ளியின் ஆண்டுவிழா மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், மாறுவேட போட்டியும் கோலாகலமாக நடந்தது. மேலும் இவ்விழாவில் அரசு மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன் ஆத்துமேடு ஊ.ஒ.து.பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவானந்தம் புதூர் ஏரியூர் ஆசிரியை இந்திரா முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா கோவிந்தன் மற்றும் பள்ளியின் ஆசிரியைகள் சாந்தி, ஜெயந்தி, மேரிஜெயசத்யா, வெண்ணிலா மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவினை ஆசிரியை வெங்கட்ட லட்சுமி தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை சாந்தி நன்றியுரை கூறினார். இப்பள்ளியின் ஆண்டுவிழா மிக சிறப்பாக நடத்த முழு ஏற்பாடுகளும், அதற்கான முயற்சியும் எடுத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகத்தை ஊர் பொதுமக்கள் பாராட்டினா;. 

No comments

Thank you for your comments