Breaking News

உலக புகழ் பெற்ற பாடைக்காவடி திருவிழா வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் முன்தினம் துவங்கியது.

கும்பகோணம், மார்ச் 21-
கும்பகோணம் அருகே வலங்கைமான் உள்ள மகாமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் துவங்கியது.  நேற்று முன்தினம் பங்குனி 7ம்நாளை முன்னிட்டு நேற்று ஞாயிற்று கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை முதல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகப் புகழ்பெற்ற பாடைக்காவடி, பால்குடம், பால்காவடி போன்ற பக்தர்கள் தங்கள் வேண்டிய நேத்திக்கடனை மகாமாரியம்மனுக்கு செலுத்தினர். 
 
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மகாமாரியம்மன் வெள்ளி அன்னவாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்து திருவீதியுலா காட்சி நடைப்பெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தாpசனம் செய்தனர்.  வருகிற 27ம் தேதி 8ம் திருநாளை முன்னிட்டு பாடைக்காவடி திருவிழாவும் அன்று மாலை 6 மணியளவில் செடில் சுற்றுதல் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.  அன்று மாலை அன்னவாகனத்தில் அம்மன் திருவீதிஉலா காட்சி நடைபெறுகிறது. 

No comments

Thank you for your comments