Breaking News

இறந்த குழந்தை அடக்கம் செய்கையில் உயிருடன் இருந்த அதிசயம்,

Dead baby came alive while buryingநெல்லை, மார்ச் 14-
நெல்லையில் இறந்துவிட்டது என்று அரசு மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிருடன் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. அவரது மனைவி சண்முகவடிவு. கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீடான புளியங்குடிக்கு சென்றுள்ளார். அங்கு சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் துடிப்பு சரியாக இல்லாததால் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று மதியம் குழந்தை பிறந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.

தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரவே அவரது உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்ய முனைஞ்சிப்பட்டிக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கே அடக்கம் செய்ய முற்படும்போது குழந்தை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர். உடனடியாக குழந்தையை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments