Breaking News

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம்

Pamban fishermen protest condemning Sri Lankan navyராமேஸ்வரம், மார்ச் 14-
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி 100க்கும் மேற்ப்பட்ட மீனவர்களும், மீனவப் பெண்களும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தாக்குவது, அவர்களை கைது செய்வது என்று தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 28 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். முன்னதாக மார்ச் 3ம் தேதி 8 மீனவர்களும், 6ம் தேதி 29 பேரும், 10ம் தேதி 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி 100க்கும் மேற்ப்பட்ட மீனவர்களும், மீனவப் பெண்களும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று நாட்டுப்படகு மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.

No comments

Thank you for your comments