தமிழகம், கேரளாவில் தந்தங்களை வேட்டையாடி வந்த "யானை" மணி கைது..!
திருப்பூர், மார்ச் 14-
இவர் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான யானை வேட்டை வழக்குகள்
உள்ளன. இதுகுறித்து மதுரை சரக வனப் பாதுகாவலர் நிஹர் ரஞ்சன் கூறுகையில்,
மணி குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர் திருப்பூரில் ஒரு
லாட்ஜில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புப் படை தேனியிலிருந்து கிளம்பி திருப்பூருக்குச்
சென்றது. அங்கு உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் மணியை மடக்கிப் பிடித்துத்
தனிப்படை போலீஸார் கைது செய்தனர் என்றார்.
கைது செய்யப்பட்ட மணி சின்னமனூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மணி மீது கேரளா, தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகத்திலும் வழக்குகள்
உள்ளனவாம். இவர் முன்பு கேரளாவில் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால்
விசாரணையி்ன்போது தப்பி விட்டாராம்.
No comments
Thank you for your comments