பணத்துடன் அல்ல வாக்குறுதியோடு வாருங்கள்: வித்தியாசம் காட்டும் ஓரியூர் மக்கள்
ராமநாதபுரம், மார்ச் 18-
ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள
ஓரியூர் புதுவயல் கிராமத்தில்
அடிப்படை தேவைகளுக்கு இன்னும்
அரசியல்வாதிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இந்த கிராமத்து மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொள்ளும்
அரசியல்வாதிகள் தேர்தல் காங்களில் மட்டும் பணத்துடன் வந்து வாக்கு
சேகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஓரியூர் புதுவயல் கிராமத்தின் எல்லையில் அங்குள்ள பொதுமக்கள் சார்பாக 2 பேனர்கள் வைத்துள்ளனர். அதில், அன்பான வாக்காளர்களே, பணத்துடன் அல்ல, வாக்குறுதிகளுடன்
வாருங்கள், தங்களின் பகுதியில் பணமில்லா ஜனநாயகத்தை விரும்புவதாகவும்
எழுதியுள்ளனர். மேலும், இன்னொரு பேனரில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து தருவது, சாலையை புதிதாக மாற்றி
தருவது, பெண்கள் சுகாதார வளாகம் அமைத்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை
முன்வைத்துள்ளனர்.
இது காசால் வாக்குகளை பிடுங்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், வாக்களிக்கவுள்ள அனைவருக்கும் எச்சரிக்கை விடுப்பதாகவே அமைந்துள்ளது.
No comments
Thank you for your comments