பொற்றாமரைக்குளத்தை வலம் வந்து இறந்த நாரை: முக்தியடைந்ததாக பக்தர்கள் கண்ணீர்
மதுரை, மார்ச் 18-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ’நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’ ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெற்று வருவது வழக்கம். இந்த லீலையில் சொல்லப்படுவது போன்று, கடந்த சில தினங்களுக்கு முன்னர்
மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்திற்கு நாரை ஒன்று வந்துள்ளதாக
கூறப்படுகிறது.
அந்த நாரை பொற்றாமரைக்குளத்தை வலம் வந்தவண்ணம் இருப்பதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மேலும் அந்த நாரை இரை எடுத்துக்கொள்ளாமல் பட்டிணியாகவே அந்த பொற்றாமரைக்குளத்தின் கரையை சுற்றி வந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த நாரை திடீரென்று நேற்று முந்தினம் பரிதாபமாக இறந்ததை
அடுத்து கோவில் நிர்வாகத்தினர் மீட்டு நல்லடக்கம் செய்துள்ளனர்.
தற்பொது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த நாரை அடக்கப்பட்ட பகுதிக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்படுவது போலவே நாரை உண்ணா நோம்பிருந்து
முக்தி அடைந்துள்ளது என பக்தர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments