Breaking News

இஸ்லாமிய பார்வையில் பொருளாதார மேலாண்மை: கத்தாரி இன்று நடக்கும் விழிப்புணர்வு கூட்டம்

ISF meet to be held in Qatar todayதோஹா, மார்ச் 18-
கத்தாரில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

கத்தாரில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பாக "விழிப்புணர்வு பொதுக்கூட்டம்" இஸ்லாமிய பார்வையில் பொருளாதார மேலாண்மை என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு கத்தார் அல்கோர் அப்துல்லாஹ் பின் அலி அல் மிஸ்நாத் ஆண்கள் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

சித்திக் பாஷா அவர்கள் இஸ்லாமிய பார்வையில் பொருளாதார மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

கத்தாரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழ் மக்கள் சங்கமிக்கும் இந்நிகழ்ச்சியில் அல்கோர் வாழ் தமிழக மக்களை கலந்து கொள்ளுமாறு கத்தார் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அல்கோர் பிரிவு அன்போடு அழைக்கிறது.

No comments

Thank you for your comments