Breaking News

காஞ்சிபுரம் கோவிலில் சிவலிங்கத்தில் தோன்றிய சித்தர் உருவம்: பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

காஞ்சிபுரம், மார்ச் 16-
காஞ்சீபுரம் கோவிலில் சிவலிங்கத்தில் தோன்றிய சித்தர் உருவம்: பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடுபெரியகாஞ்சிபுரம் செங்கழு நீரோடை நேரு மார்க்கெட் பின்புறம் கடுவெளி சித்தர் கோவில் உள்ளது. இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு சிவனுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் ஏராளமான பக்தர்கள் இருந்தனர்.

பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தின் மீது சுற்றப்பட்டிருந்த துணியில் சித்தர் உருவம்
தவக்கோலத்தில் இருப்பது போன்ற தோற்றம் தெரிந்தது. இதனை பார்த்து அதிசயித்த பக்தர்கள் நமச்சிவாய... நமச்சிவாய... என்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். சிறிது நேரத்தில் சித்தர் உருவம் மறைந்து விட்டது.

இதுபற்றி தெரிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சிவனை வழிபட்டனர். இந்த தகவல் ‘வாட்ஸ்–அப்’பிலும் பரவியதால் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கோவிலுக்குள் வந்தபடி உள்ளனர்.

No comments

Thank you for your comments