Breaking News

சிவகாசி நகராட்சி பகுதிகளில் 8 இடங்களில் ரூ.87.00 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர், மார்ச் 4-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி நகராட்சி பகுதியில்   8 இடங்களில் ரூ.87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகம், ரேசன் கடை, மேல்நிலை
நீர்த்தேக்கத்தொட்டி, சுத்திகரிப்பு செய்த குடிநீர் நிலையம், கலையரங்க கட்டிடம் ஆகியவற்றை மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

சிவகாசி நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல்வேறு மேம்பாட்டு நிதியின் கீழ்  சாலை அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல், நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுதல், கலையரங்கம் கட்டுதல், சுகாதார வளாகம் அமைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சி.என்.ஏ. அண்ணா சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடத்தையும், அய்ய நாடார்ஜானகி அம்மாள் மருத்துவமனை வலப்புரம் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சமும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடையினையும்,  பராசக்தி காலனியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சமும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், அண்ணா காலனியில் பொது நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு செய்த குடிநீர் வழங்கும் நிலையத்தினையும், அண்ணா காய்கறி மார்க்கெட்டில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சமும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பாதை மேற்கூரையினையும், நாகூர் ஆண்டவர் காலனியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சமும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடையினையும், அம்மன் கோவில் பட்டி நகராட்சி பள்ளியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும், சோலை காலனியில் பொது நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு செய்த குடிநீர் வழங்கும் நிலையத்தினையும் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து  வைத்தார்கள்.

                இந்நிகழ்ச்சிகளில் சிவகாசி நகர்மன்ற தலைவர் மரு.கதிரவன், சிவகாசி நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பதுருதீன், சிவகாசி ஒன்றியகுழுத்தலைவர் சி.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி.ஆர்.கருப்பசாமி, உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments