Breaking News

திருவண்ணாமலை அருகே 8 பவுன் தங்க நகை, உண்டியல் பணம் மாயம்

திருவண்ணாமலை, மார். 4-
திருவண்ணாமலை அருகேவுள்ள சோமாசிபாடி கிராமத்தில்  அம்மன் மற்றும் விநாயகர் கோயிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.அம்மன் கழுத்திலிருந்த 8பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணமும் கொள்ளை போகியுள்ளது.

திருவண்ணாமலை டூ சென்னை நெஞ்சாலையில் உள்ள சோமாசிபாடி கிரமாத்தில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் மற்றும் அருகேவுள்ள
விநாயகர் கோயில் உள்ளது.இக்கோயிலில் நேற்று நள்ளிரவு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.மேலும் ரேணுகாம்பாள் கோயிலில் அம்மன் கழத்தில் போடப்பட்டிருந்த 8பவுன் தங்க சங்கலியையும் எடுத்து சென்று உள்ளனர்.காலை வழக்கம்போல பூஜை செய்ய வந்தவர்கள் கோயிலின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்து, கீழ்பென்னாத்துர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.தகவலறிந்து கொள்ளை நடந்த கோயிலுக்கு வந்த போலீஸார் தடவியல் துறையினரை வரவழைத்து சோதனை நடத்தினார்கள்.மேலும் இதுகுறித்து வழக்க பதிவு செய்துவுள்ள கீழ்பென்னாத்தூர் போலீஸார் கோயிலில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments