Breaking News

வேலூரில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 7ம் வகுப்பு மாணவி

வேலூர், மார்ச் 25–

அடுக்கம்பாறையை அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி. கணியம்பாடியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை, அவரது பெரியப்பா சரியாக படிக்கவில்லை என திட்டியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த மாணவி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவளை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments