Breaking News

ஆம்பூர் அருகே மினிலாரி மோதி 4 ஆட்டோக்கள் நொறுங்கியது

ஆம்பூர் அருகே மினிலாரி மோதி 4 ஆட்டோ நொறுங்கியதுஆம்பூர், மார்ச்.25–

பெங்களூரில் இருந்து பிளாஸ்டிக் பைப்புகளை ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று ஆம்பூர் நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த மின்னூரில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மினிலாரி இழந்தது.


இதனால் சாலையில் தாறுமாறாக ஓடியது. மினிலாரியை அதன் டிரைவர் நிறுத்த முயற்சித்தார். ஆனாலும் பயனில்லை.

மின்னூர் ஆட்டோ ஸ்டாண்டில் வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மினிலாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 ஆட்டோக்கள் சேதமடைந்தது. விபத்து நேர்ந்தபோது, ஆட்டோவில் அதன் டிரைவர்களோ, பயணிகளோ யாரும் இல்லை. இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments