விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் அர்ஜுனா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
தி.மலை, மார்ச் 11-
விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் அர்ஜுனா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட கலெக்டர்அ.ஞானசேகரன் அறிவித்துள்ளார்.
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தியஅரசு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெ.116ஏ, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-600 084 என்ற முகவரிக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 74017 03452, 04175-233169 என்ற எண்களில்
தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments