Breaking News

கல்லூரி மாணவ மாணவிகள் 5000 பேர் பங்குபெற்ற தேர்தலில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.நந்தகோபால்,துவக்கி வைத்தார்.

வேலூர், மார்ச் 18-
     வேலூர் புதிய பேருந்து நிலையம் செல்லியம்மன் கோயில் எதிரிலிருந்து புதிய வாக்காளர்களாகிய இளைஞர்கள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மேலும் தங்களுடைய வாக்கை நியாமாகவும் நோ;மையாகவும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் 5000 பேர் பங்குபெற்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.நந்தகோபால்,துவக்கி வைத்தார்.

                        இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் வேலூர் முத்துரங்கம் கலைக் கல்லூரி, டி.கே.எம். மகளிர் கலைக் கல்லூரி, காட்பாடி அக்ஸீலியம் மகளிர் கலைக் கல்லூரி, தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ஊரிஸ் கலைக் கல்லூரி, பாரத் கல்லூரி கல்வி நிறுவனம் போன்ற பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 5000 மாணவ மாணவிகள் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் செல்லியம்மன் கோயில் எதிரிலிருந்து தொடங்கி வேலூர் கோட்டை வழியாக நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் முடிவுற்றது. பின்னர் நேதாஜி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பிரம்மாண்டமான கையெழுத்து பதாகையில் தங்கள் வாக்கை முறையாக செலுத்துவோம் என்று கையெழுத்திட்டனர். இதனை தொடா;ந்து மாணவ மாணவிகள் தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

                        இந்நிகழ்ச்சிகளில் செய்தி மக்கள் தொடா;புத்துறையின் மிண்ணனு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் உரையாடிய தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் வீடியோ படக்காட்சி நடத்தப்பட்டது.

                        இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய் சீனிவாசன், மகளிர் திட்ட அலுவலர் லோகநாயகி, துணை காவல் கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.விஜயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் நாகராஜன், வேலூர் வட்டாட்சியர் நெடுமாறன், இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்திரநாத் வேலூர், மற்றும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments