Breaking News

வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் படுகாயம்

திருவண்ணாமலை, மார்ச் 18-
திருவண்ணாமலை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆடையூர் பகுதியில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சாத்தனூர், இறையூர், சொர்ப்பனந்தல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெண்கள்
பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வேனை ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் சாத்தனூர் பகுதியிலிருந்து ஆடையூருக்கு இயக்கினார். நேற்று காலை 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு  திருவண்ணாமலை செங்கம் சாலை தானாமேடு புதூர் அருகே வேன் வந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓட்டுநர் சுரேஷ் முற்பட்ட போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பெண்கள் வாகனத்தில் அடியில் சிக்கிக் கொண்டு அலறினர். அலறல் சப்தம் கேட்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து வேனை நிமிர்த்தி அடியில்
சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் இறையூரை சேர்ந்த செவ்வந்தி, டைலர் தேவேந்திரன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக வேலூர் மற்றும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு பதிவு செய்து இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments

Thank you for your comments