Breaking News

17,350 ரவுடிகளையும் "டிரான்ஸ்பர்" செய்யலாமே?.. டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்!

சென்னை, மார்ச் 16-
தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு வசதியாக மாவட்டந்தோறும் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை ஊரை விட்டு வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.

இதுதொடர்பாக காவல் நிலையங்களில் உள்ள ரவுடிகள் பட்டியலை வைத்து தேர்தல் ஆணையம் ஒரு பட்டியலைத் தயாரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைத் தேர்தல் முடியும் வரை ஊரை விட்டு வெளியேற்றினால் என்ன என்று்ம் டிஜிபிக்கு அது கேள்வி கேட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் ரவுடிகள் பட்டியலைப் பராமரித்து வருகின்றன. அவற்றை தற்போது தேர்தல் ஆணையம் தொகுத்து வருகிறது.

2012ல் 16,500 ரவுடிகள்
போலீஸ் ஆவணப்படி, தமிழகத்தில் 2012ம் ஆண்டு 16,500 பேரின் பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இதில், காவல் நிலைய வரலாற்று பதிவேட்டில் உள்ள 6,000 ரவுடிகளின் பெயர் பட்டியலும் அடங்கும்.


20 சதவீத அதிகரிப்பு
தற்போது ரவுடிகள் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து விட்டதாம். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில்தான் ரவுடிகள் அதிகம் உள்ளனராம்.

திருவள்ளூரில் கம்மி
ரவுடிகள் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் ரவுடிகள் எண்ணிக்கை குறைவாம். அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் 345 ரவுடிகள் உள்ளனர்.

நெல்லையில்
நெல்லை மற்றும் புறநகர் பகுதியில் 1,980 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,300 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 பேரும் உள்ளனர்.

கோவை
கோவை மாவட்டத்தில் 815 பேரும், சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 700 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 416 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 475 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 655 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 605 பேரும் உள்ளனர்.

மொத்தம் 17,350
தமிழகத்தில் மொத்தமாக 17,530 ரவுடிகள் இருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சமூக விரோதிகள், ரவுடிகள், பிரச்சினையை தூண்டுபவர்கள் என பல்வேறு அடிப்படையில் இந்த பட்டியலை உளவுத்துறையினர் தயாரித்துள்ளனர்.

சொந்த ஊரை விட்டு வெளியேற்ற ஆலோசனை
இந்த ரவுடிகளை தேர்தல் முடியும் வரை அவர்கள் வசித்து வரும் சொந்த ஊர்களிலிருந்து வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு போலீஸ் டிஜிபி அசோக் குமாருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஒரு டவுட்.. சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு இவர்களை "டிரான்ஸ்பர்" செய்தால் அங்கு போய் இவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்களா??



No comments

Thank you for your comments