Breaking News

சோம்நாத் கோயிலில் தாக்குதல் நடத்த முயன்ற சதி முறியடிப்பு: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத், மார்ச் 16-
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலின் மீது தாக்குதல் நடத்தயிருந்த தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டும் குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி தீட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களது முயற்சியை முறியடித்தது மட்டுமல்லால் 3
தீவிரவாதிகளையும் பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

மீதமுள்ள 7 தீவிரவாதிகளை பிடிப்பதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, மும்பை தாக்குதலைப் போலவே மேலும் ஒரு தாக்குதலை நடத்தும் நோக்கத்தில் குஜராத் மாநிலத்துக்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவு அமைப்புகளிடமிருந்து தகவல்கள் வந்தன.

மேலும், மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

குறிப்பாக, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் மீது இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை அமைப்புகள் எச்சரித்தன.
இதன் அடிப்படையில், குஜராத் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை கடந்த 11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனினும், மீதமுள்ள 7 தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இவர்கள் அனைவரும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments

Thank you for your comments