20 ஓவர் உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட்: பங்ளாதேஷை வீழ்த்தியது இந்தியா
20 ஓவர் உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் பங்ளாதேஷை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன்
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் இந்தியாவில் நடத்தப்படுகிறது.ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன்
அதன்படி பெண்களுக்கான 5 ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளும், "பி" பிரிவில் பங்ளாதேஷ் , இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
No comments
Thank you for your comments