கலெக்டர் அலுவலகம் முன்பு 12 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: கோவையில் பரபரப்பு
கோவை, மார்ச் 22-
மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 12 பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
காரமடை, பெள்ளாதி கிராமம், வெண்மணிநகரை சேர்ந்த பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து குவிந்தனர்.
அவர்களின் கைகளில் பாட்டில்களை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலகம்
முன்பு இருந்த காவல்துறையினர் அந்த பெண்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.காரமடை, பெள்ளாதி கிராமம், வெண்மணிநகரை சேர்ந்த பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து குவிந்தனர்.
அவர்களின் கைகளில் பாட்டில்களை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலகம்
அப்போது திடீரென அந்த பெண்கள், தாங்கள் வைத்திருந்த பாட்டில்களை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீவைக்க முயன்றனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையிர் உடனடியாக 12 பெண்கள் தீக்குளிப்பதை தடுத்து அவர்களிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மண்எண்ணெய்யை தலையில் ஊற்றிய பெண்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்கள் கூறியதாவது:–
பெள்ளாதி, வெண்மணி நகர் பகுதியில் 85 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் நிலத்துக்கு பட்டா தர நடவடிக்கை எடுப்பதாகவும், மின்சார வசதி, குடிநீர் இணைப்பு தருவதாகவும் கூறி ஒருவர் பணம் வசூலித்தார்.
ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தராமல் அந்த நபர் ஏமாற்றி விட்டார். இதைத்தொடர்ந்து பெள்ளாதி ஊராட்சி தலைவரை சந்தித்து இந்த பகுதியில் அடிப்படை வசதி செய்து தருமாறு கோரினோம்.
அவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதனை தெரிந்து கொண்ட எங்களிடம் பணம் வசூலித்த ஒருவரும், அவருடைய கூட்டாளிகளும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
மேலும் எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் மீது பாலியல் தொடர்பான பொய் புகார்களையும் செய்து வருகிறார்கள். சிலரை தாக்கியும் உள்ளனர்.
எனவே 85 குடும்பத்தினரையும் மிரட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
நாங்கள் இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எங்களால் வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லாததால் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றோம். இவ்வாறு கூறினர்.
இது தொடர்பான மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இந்த மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தி, காரமடை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments