Breaking News

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு 6 கருணை மதிப்பெண் பள்ளிக் கல்வித்துறை

6 grace marks for plus two chemistry studentsசென்னை, மார்ச் 22-
பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 6 வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சில மிகக் கடினமாக இருந்ததாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கேட்கப்படாத கேள்விகள் என்றும் வருந்தினர் பல மாணவர்கள். சிலர் தற்கொலை முயற்சிகளில் இறங்கியதாகவும் கூறப்பட்டது.

எனவே, வேதியியல் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என்று பல மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவெடுத்துள்ளது கல்வித் துறை.

இதுகுறித்து வெளியாகியுள்ள பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ப்ளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 17-வது வினா சரியாக கேட்கப்படவில்லை.

மேலும் 5 மதிப்பெண் கேள்வியில் 70-ம் எண் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கேள்வியில் 11 என்று இருப்பதற்கு பதிலாக ரோமன் எழுத்தில் கேட்கப்பட்டு இருந்தது. ரோமன் எழுத்தில் இரண்டு என்றால் அது கால்சியத்தை குறிக்கும். ரோமன் எழுத்து அல்லாமல் 11 என்றால் அது காப்பரை குறிக்கும்.

இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் 1 + 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 மதிப்பெண்கள் கிடைக்கும்," என்றார்.

No comments

Thank you for your comments