Breaking News

தலைமை செயலகத்தில் தமிழிசை- மகன் திருமண அழைப்பை ஜெ.விடம் வழங்கினார்

Tamilisai Soundararajan  meets Jayalalithaaசென்னை, பிப்.12:
முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்து மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
 
தமிழிசை சவுந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்கவுள்ளது.

இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த திருமண விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அழைப்பு விடுத்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்

இதேபோல் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.

அப்போது, தாம் பிரதமர் மோடி குறித்து எழுதிய புத்தகத்தை ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசாக தமிழிசை வழங்கினார்.

No comments

Thank you for your comments