சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புகள் அவசியம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
டெல்லி, பிப்.13:
சர்வதேச அளவில் சமூக பிரச்சனைகளுக்கு
தீர்வுகாணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் அசோகா என்ற
அமைப்பினரின்
செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் அவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பிரணாப் முகர்ஜி கெளரவித்தார்.
இன்றைய சமூகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படுகின்றன.
முக்கியமாக நமது நாட்டில் வாழும் ஏராளமான சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியம்.
இவை சமூகத்துக்குப் பயனளிப்பதாகவும், பொருளாதாரரீதியாக உதவிகரமாக இருக்க வேண்டியதும் அவசியம்.
இப்போது பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையிலும் கண்டுபிடிப்புகள் வேண்டும் என
ஜனாதிபதி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments