Breaking News

நள்ளிரவில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பரிமாறப்பட்ட பல லட்சம் ரூபாய்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

புதுக்கோட்டை, பிப்.13:
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருந்த சிலரது கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்ததாக எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில்,
1000க்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.

நேற்று இரவு 12 மணியளவில் வாடிக்கையாளர்கள் சிலரின் செல்போனிற்கு, உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது.

பணம் எதுவும் எடுக்காமலேயே இவ்வாறு குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வங்கி நிர்வாக இலவச சேவையை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அதில் சரியான பதில் கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கே வங்கி வாசலில் கூடியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறுகையில், நான் ஆசிரியராக பணியாற்றி ஓய்வில் இருக்கிறேன்.

எனது வங்கி கணக்கில் 5,25,000 ரூபாய் இருந்தது. அதில் இருந்து ஐந்து லட்சத்தை பிக்சட் டெபாசிட்டிற்கு மாற்றியதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
உடனே வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட பொழுது சரியான பதில் இல்லை.

மேலும், எனது நண்பர்களுக்கு போன் செய்தால் இதே பிரச்சனைதான் அவர்களுக்கும் இருந்ததாக கூறினார்கள்.

என் அனுமதி இல்லாமல் எப்படி வங்கி நிர்வாகம் எனது கணக்கை வேறு ஒரு திட்டத்தில் மாற்ற முடியும்? தனியார் வங்கிகள் அதிக கொள்ளை அடிப்பதால்தான் அரசு வங்கிக்கு வருகிறோம். ஆனால் இங்கும் பாதுகாப்பு என்பது இல்லை என தெரிவித்துள்ளார். 

வங்கி இன்று விடுமுறை என்பதால் பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார், வங்கி மேலாளர் நரசிம்மனை வரவழைத்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

நரசிம்மன் கூறுகையில், சேவிங்ஸ் கணக்கில் இருந்து மல்ட்டி ஆப்சன் டெபாசிட் திட்டத்தில் உங்களது பணத்தை வங்கி நிர்வாகம் மாற்றியுள்ளது.
யாரும் பயப்பட வேண்டாம். உங்களது கணக்கில் பணம் அப்படியே இருக்கிறது.

திங்கள் கிழமை நேரில் வந்து உங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments