Breaking News

அரசு விலையில்லா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படவிருந்த மின்விசிறிகள் தீயில் எரிந்து நாசம்

வேலூர், பிப்.13: 
அரசு விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அணைகட்டு தொகுதி தெள்ளூர் கிராமத்தில்
பயனாளிகளுக்கு வழங்குவதற்காக பொருட்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை திடிர் என்று பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து புகை வெளிவந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் பள்ளியின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்  தீ மள மளவென்று எறிந்து கொண்டிருந்தது பொதுமக்கள் அணைக்க முயன்றனர். தீயணைப்புத்துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் தீயனைப்புத்துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மின்விசிறிகள் எரிந்து நாசமாயின இதனை அறிந்து பஞ்சாயத்து உறுப்பினர்கள் போலீசில் புகார் கொடுக்க போவதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், சமுக விரோதிகளால் இந்த தீ வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments

Thank you for your comments