Breaking News

வேலூர் மத்திய சிறையில் டிராக்டர் ஓட்டுநர் பதவிக்கு ஆள் சேர்ப்பு, தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

வேலூர், பிப்.13:
வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள டிராக்டர் ஓட்டுநர் பதவிக்கு ஒருவரை நியமனம் செய்யும் நேர்முக தேர்வு, வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் நடைபெற உள்ளது. அப்பதவிக்கு கீழ்க்ண்ட தகுதிகள் உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் சுயசான்றொப்பத்துடன் இனைத்து தபால் மூலம் கீழே குறிப்பிடபட்டுள்ள உரிய படிவத்துடன் விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ்கள் சரி பார்த்தப்பின் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு வேலூர் மத்திய சிறையிலிருந்து தபால் மூலம் அழைக்கபடுவோர் மட்டும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

1.கல்வித்தகுதி 10,
2.விண்ணப்பதாரரின் இனசுழற்சி வகைகள் MBC,
3.வயது வரம்பு 18 முதல் 32 வரை.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய நகல்கள்
1. குறைந்த பட்ச கல்வி தகுதி 10வது வகுப்பிற்கான கல்வி சான்று
2. சாதி சான்றிதழ்
3. கனரக வாகனம் ஓட்டுநர் உரிமை நகல்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ரூ.22 க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு 25.02.2016ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைகுகுமாறு தபாலில் அழுப்ப வேண்டும்.

முகவரி:
சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை, வேலூர்,
தொரப்பாடி,
வேலூர் மாவட்டம் - 632 002.


No comments

Thank you for your comments