நாகர்கோவில் அருகே, விடுதி அறையில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்திலுள்ள மருத்துவ
கல்லூரியில் படித்து வந்த திருச்சி மாவட்ட மாணவன் தூக்கிட்டு தற்கொலை
செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில், மூகாம்பிகா என்ற தனியார்
மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு எம்.பி.பி.எஸ் நான்காம்
ஆண்டு படித்து வந்தார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பரிதி செம்மல்.
இன்று காலை வெகுநேரமாகியும், பரிதி தங்கியிருந்த மாணவன் விடுதி அறை
கதவு திறக்கப்படாததால், விடுதி நிர்வாகிகள் ஜன்னல் வழியே பார்த்த போது
மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணபட்டார்.
குலசேகரம் காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கவே, போலீசார் உடலை
கைப்பற்றி, நாகர்கோவில், ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments