Breaking News

பரபரப்பான சாலையில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்!

கலிபோர்னியா, பிப்.24:
கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரபரப்பாக இயங்கும் சாலை ஒன்றில் குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் Pacoima பகுதியில்தான் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக
கூறப்படுகிறது.

Pacoima பகுதியின் பரபரப்பான சாலையின் மீது பறந்துகொண்டிருந்த போது விமானியின் கட்டுப்பாட்டினை இழந்த குட்டி விமானம் நிலைத்தடுமாறியுள்ளது.

இதனையடுத்து அந்த சாலையில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் இருந்து விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

நிலைதடுமாறி விழுந்த விமானம் அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி நொறுங்கியதாக கூறப்படுகிறது.
அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் சிலர் இந்த விபத்தில் சிக்கி காயமின்றி தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

No comments

Thank you for your comments