Breaking News

உயர்ந்த வாழ்க்கை தரத்துடன் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த வியன்னா நகரம்

ஆஸ்திரியா, பிப்.24:
உலக நாடுகளில் உயர்ந்த வாழ்க்கை தரத்துடன் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Mercer Quality of Life survey எனப்படும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.


இரண்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரமும் அதன் அடுத்த இடத்தில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரம் இடம் பிடித்துள்ளது.

குடிமக்களுக்கு உயரிய வாழ்க்கை தரத்தை வழங்குவதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் பிரான்சின் பாரிஸ் நகரமும் பிரித்தானியாவின் லண்டன் நகரமும் தவறியுள்ளதை இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் முன்னணி நகரங்களாக கருதப்படும் இவை மூன்றும் Mercer வெளியிட்டுள்ள பட்டியலின் முதல் 35 நகரங்களில் கூட இடம் பிடிக்கவில்லை.

முதல் பத்து நகரங்களில் ஜேர்மனி நாட்டின் முனிச், Dusseldorf மற்றும் Frankfurt ஆகிய 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

தரத்தை கணக்கிடுவதற்காய் அந்த நகரத்தின் பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், குடியிருப்பு மற்றும் கல்வித்தரத்தையும் காரணிகளாக கொண்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.

இதில், தனிமனித பாதுகாப்பு, உள்ளூர் சட்ட அமலாக்கப்பிரிவின் செயல்திறன், மற்ற நாடுகளுடனான நல்லுறவு போன்ற அம்சங்களை கூடுதலாக கவனத்தில் கொண்டனர்.

ஒட்டு மொத்தமாக உலக அளவில் தரமான வாழ்க்கையை அமைத்து வழங்கும் 230 நகரங்களை தெரிவு செய்ததில் தற்போது கலவர பூமியாக திகழும் பாக்தாத் நகரம் இடம்பெறவில்லை.

No comments

Thank you for your comments