Breaking News

போலி சான்றிதழ், முத்திரைகள் தயாரித்து மோசடி செய்த நடிகர் அதிரடி கைது

சென்னை, பிப்.22:
போலி சான்றிதழ் தயாரித்த நடிகரை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசியை அடுத்த சிவராமபேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த சங்கரபாண்டியன் (37), தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி நிறுத்திய
பைக்கை சிறிது நேரத்தில் காணவில்லை.

இதுகுறித்து தென்காசி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தென்காசி-ஆய்க்குடி ரோட்டில் நேற்று வாகன சோதனை நடத்தியபோது சங்கரபாண்டியனின் பைக் சிக்கியுள்ளது.

வண்டியுடன் பிடிபட்ட 2 பேரும் தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சுரேஷ் (25) மற்றும், கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இனியபாரத் எனவும் தெரியவந்துள்ளது.

சென்னையில் சினிமா துறையில் பயிற்சி பெற்றுவந்த சுரேஷ், பல படங்களில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தென்காசி வரும் சுரேசும் இனியபாரத்தும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி பேருந்து நிலையத்தில் திருடிய பைக்கை விற்க 2 பேரும் சேர்ந்து போலி சான்றிதழ், முத்திரைகள் தயாரித்துள்ளனர்.

போலி ஆர்சி புக் தயாரித்து அதில் வட்டார போக்குவரத்து அதிகாரியைப் போல் சுரேஷ் பச்சை மையில் கையெழுத்து போட்டுள்ளார்.

மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான போலி ஆர்சி சான்றிதழ்கள், அரசு முத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments