உணவு சாப்பிட மறுத்த சிறுமி: அடித்துக்கொன்ற காவற்பொறுப்பாளர்!
அமெரிக்கா, பிப்.22:
அமெரிக்காவில் உணவு சாப்பிட மறுத்த 3 வயது சிறுமியை அடித்ததில் அச்சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேரத்தில் தனது மகள் Latrice- ஐ பார்த்துக்கொள்ள Danielle Turner
என்ற பெண் காவற்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,
காவற்பொறுப்பாளர் சாப்பிடுவதற்காக இச்சிறுமிக்கு உணவு
கொடுத்தபோது, அந்த
உணவினை சாப்பிட மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பாதுகாப்புபொறுப்பாளர், அடித்ததில், அச்சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து 911 எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அவரசரப்பிரிவு உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கையில், சிறுமி சுயநினைவற்ற நிலையில்
கிடந்துள்ளார், இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றி பின்னர்
சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேலும், அச்சிறுமியின் உடலை பரிசோதனை செய்ததில், அவரது உடலில் தீவிரமான காயங்கள் இருந்துள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தாயார் கூறுகையில், இதுபோன்று நடக்கும் என நான்
நினைத்துக்கூட பார்க்கவில்லை, தற்போது எனக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை
பிறந்துள்ளது.
இருப்பினும் எனது மகள் இறந்தது எனக்கு கவலையாக உள்ளது எனக்கூறியுள்ளார்.
தற்போது போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள காவற்பொறுப்பாளர் பெண்மணி
மீது, கொலை மற்றும் குழந்தையை பொறுப்பற்று கவனித்துள்ளார் என்று
குற்றசாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், மார்ச் 22 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Thank you for your comments