ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 10 இந்திய மாலுமிகள் மீட்பு
டெல்லி, பிப்.22:
ஐவோரி கோஸ்ட் கடலில் ‘மேக்சிமஸ்’ என்ற கப்பலில்
இருந்த 11 இந்திய மாலுமிகளையும், ஒரு பாகிஸ்தான் மாலுமியையும்
கடற்கொள்ளையர்கள்
கடந்த சனிக்கிழமை கடத்திச்சென்றனர்.
இதையடுத்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நைஜீரிய ராணுவத்தை இந்தியா கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், கடற்கொள்ளையர்களிடம் சிக்கியவர்களில் 10 இந்திய மாலுமிகள்
நைஜீரிய கடற்படையினரால் மீட்கப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதமுள்ள இந்தியாவை சேர்ந்த ஒரு நபரையும்,
பாகிஸ்தானியரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments