Breaking News

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்: ஊழியர் சங்க தலைவர் அறிவிப்பு

Government employees withdrawn their agitation in Tamilnaduசென்னை, பிப்.20:
அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி அறிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.

இந்நிலையில், மக்கள், அரசின் நலன் கருதி ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்ச்செல்வி இன்று மாலை அறிவித்தார். திங்கள் முதல் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்வர் எனவும் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் வல்லுனர் குழு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்றும், வல்லுனர் குழுவின் தலைவர் யார் என்றும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி வலியுறுத்தியுள்ளார். வரும் திங்கள் அன்று கோரிக்கை மனுவை தலைமை செலரிடம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலியோ சொட்டு மருந்து, தேர்வு, தேர்தல் போன்ற முக்கிய பணிகள் அடுத்தடுத்து இருப்பதால், அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், முதல்வர் அறிவித்த திட்டங்களை, அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

No comments

Thank you for your comments