Breaking News

வகுப்பறையில் அமர்ந்து ஆற அமர மது அருந்தி மயங்கிய மாணவிகள்.. புதுவையில்!

புதுச்சேரி, பிப்.20:
Puducherry school girls consume liquor in class roomபுதுச்சேரியில் வகுப்பறைக்குள் அமர்ந்து குளிர்பானத்தில் மதுவைக் கலந்து நிதானமாக மது அருந்தி பின்னர் மயங்கி விழுந்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் அவர்கள்.

வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள சில மாணவிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த மதுவை எடுத்து குளிர்பானத்தில் கலந்து தாங்களும் குடித்து, அருகில் இருந்த சக மாணவிகளுக்கும் கொடுத்துள்ளனர்.

இதில் போதை ஏற அவர்கள் சில நிமிடங்களில் மயங்கி டெஸ்க்கில் சாய்ந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, விசாரணை நடத்தியதில் அவர்கள் மது அருந்தியது தெரிந்து பதறிப் போனார். பின்னர் தலைமை ஆசிரியையிடம் தகவல் தெரிவித்தார். அனைவரும் சேர்ந்து தண்ணீர் தெளித்து மாணவிகளின் மயக்கத்தை தெளிவித்தனர்.

பின்னர் மது அருந்திய மாணவிகளை தனி அறையில் அமர வைத்த தலைமை ஆசிரியை அவர்களது பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்து நடந்ததைக் கூறியுள்ளார்.

இவர்கள் எங்கு மது வாங்கினார்கள், யார் வாங்கிக் கொடுத்தது, ஏன் வகுப்பறையில் அமர்ந்து குடித்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments