Breaking News

உக்ரைன் சிறுவனுக்கு வாழ்வளித்த தமிழரின் இதயம்

கோவை, பிப்.25:
கோவையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. 

கோவையை சேர்ந்த ரமேஷ் (20) சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சென்னை அடையாறில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் 14 வயது சிறுவனுக்கு இதயமும், ஆயிரம் விளக்கு பகுதியில் சிகிச்சை பெற்று வரும் 33 வயது நபருக்கு பொருத்துவதற்கு கணையமும் தானமாக கொடுக்க அவரது உறவினர்கள் முன்வந்துள்ளனர்.

கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இதயம் விமான நிலையத்தில் இருந்து 15 நிமிடத்தில் அடையாறு மருத்துவமனையை அடைந்துள்ளது.

இதற்காக விமான நிலையம் முதல் அடையாறு மருத்துவமனை வரை உள்ள சிக்னல்கள் தடையில்லாமல் வாகனம் செல்லும் வகையில் மாற்றப்பட்டிருந்தது.

பின்னர் மருத்துவமனையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு அந்த இதயம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், ரமேஷ் உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட கணையமும் விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை வந்தடைந்துள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனை வரை உள்ள 18 கி.மீ. தூரத்தை அவசர ஊர்தி ஓட்டுனர் 12 நிமிடம் 40 நொடிகளில் கடந்து சென்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் கணையத்தை பொருத்தியுள்ளனர்.

No comments

Thank you for your comments