தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, திருவள்ளூரில் மினி மாரத்தான் ஓட்டம்
மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்
உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய வாக்காளர் தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருவள்ளூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி.எ. சுந்தரவல்லி இதனை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 33 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், சிவங்கை அணி முதலிடத்தையும், தேவகோட்டை அணி 2-ம் இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு அமைச்சர் டாக்டர் S. சுந்தரராஜ் பரிசுகளை வழங்கினார்.
No comments
Thank you for your comments